பொதுவாக நாம் விரும்பி சாப்பிடும் தயிர் பலவிதமான சத்துக்களை கொண்டது. கால்சியம், புரோட்டீன், வைட்டமின் என பல்வேறு சத்துக்களைக் கொண்டது தயிர். பாலை விட தயிர் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்.
அதே அளவிற்கு முகத்தில் பூசிக்கொள்ளும் போதும் பல நன்மைகளை கொடுக்கிறது.
தயிர் எப்போதுமே சரும பராமரிப்புக்கு சிறந்தது
அந்தவகையில் தயிரை எப்படி முகத்திற்கு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
- ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி அரிசி மாவு மற்றும் அதே அளவு தயிர் சேர்க்கவும்.இந்த கலவையுடன் அரை தேக்கரண்டி அளவிற்கு எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.இந்த மூன்று பொருட்களும் ஒன்றுடன் ஒன்று சேரும் வண்ணம் நன்றாக கலக்கவும்.இந்த ஸ்க்ரப்பை உங்கள் முகத்தில் தடவி 3-5 நிமிடங்கள் வட்ட வடிவத்தில் மசாஜ் செய்யவும்.உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
- 2 தேக்கரண்டி ஆலிவ் ஆயில், 1 தேக்கரண்டி தேனை எடுத்துக்கொள்ளுங்கள்.2 டேபிளில் ஸ்பூன் வெள்ளை அல்லது பழுப்பு சர்க்கரை சேர்க்கவும்.ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கரைத்துக்கொண்டு, முகம் முழுவதும் பூசவும்.அந்த கலவை காயும் வரை காத்திருந்து, அதன் பின்னர் முகத்தில் வட்ட வடிவத்தில் 2 முதல் 3 நிமிடங்கள் வரை தேய்த்து மசாஜ் செய்யவும்.பின் நீரில் முகத்தை நன்றாக கழுவி விட்டு, மாய்ஸ்சரைசர் பூசி உலரவைக்கவும்.
- ஒரு சிறிய கிண்ணத்தில் 1 தேக்கரண்டி ஓட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர், 2 தேக்கரண்டி தயிர் மற்றும் 1 தேக்கரண்டி தேன் சேர்க்கவும்.இவை மூன்றையும் ஒன்றாக கலக்குங்கள்.முகத்தில் சிறிதளவு தண்ணீர் பூசி, அதன் மீது இந்த கலவையை பூசவும். பின்னர் ட்ட இயக்கத்தில் 5-6 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து அதனை தண்ணீரில் கழுவி, உங்களுக்கு பிடித்த மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.