போட்டிகள் அதிகம் நிறைந்த இன்றைய நவீன உலகில் உடல் மற்றும் மனநலம் காக்க வேண்டியது அனைத்து வயதினருக்கும் அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு
யோகா பயிற்சி
அளிக்க
சவூதி அரேபியா
அரசு முடிவெடுத்துள்ளது.
பள்ளி மாணவ- மாணவிகளின் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் வகையில் விரைவில் அங்குள்ள பள்ளிகளில் விளையாட்டு பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக யோகா பயிற்சி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கல்வித்துறையுடன் இணைந்து மாணவர்களுக்கு யோகா வகுப்புகள் நடத்தப்படும் என சவுதி யோகா கமிட்டி தெரிவித்துள்ளது.
3 கோடி மக்களை.. மொத்தமாக வீட்டோடு முடக்கிய சீனா.. என்னாச்சு??
சவுதி அரேபியாவில் உள்ள பள்ளிகளில் யோகா கற்பித்தல் மற்றும் பயிற்சி செய்வதற்கு 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
2015 ஆம் ஆண்டு முதல் ஜூன் 21 ஆம் தேதி ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.