மின்சாரக் கட்டணங்களை உடனடியாக உயர்த்த வேண்டுமென மின்சார சபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.
பணிப்பாளர் சபையின் தீர்மானம் குறித்து அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை பெற்றுக் கொள்ளுமாறு, அமைச்சரவை ஆலோசனை வழங்கியுள்ளது.
மின்சாரக் கட்டணத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்த அறிக்கையை இலங்கை மின்சார சபை தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இரண்டு ரூபா ஐம்பது சதமாக காணப்படும் அலகு ஒன்றின் விலையை 15 ரூபாவாக அதிகரிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மின் பயனாளர் சங்கத்தின் அழைப்பாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சாரசபையின், டீசல் கொள்வனவு உள்ளிட்ட ஏனைய கடன்களின் மொத்த தொகை நான்காயிரம் கோடி ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.