செங்கல்பட்டில் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக சிறுமி ஒருவர் வெளியிட்ட வீடியோ தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அந்த சிறுமி வெளியிட்டிருந்த வீடியோவில் தனது உறவினர் ஒருவர், தனக்கும் சகோதரிக்கும் பாலியல் தொல்லை அளிக்கிறார் என்றும் போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், சிறுமி குறிப்பிட்ட தினேஷ் குகன், எல்லப்பன், கோபால கிருஷ்ணன் ஆகிய மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேநேரம் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண் கொடுத்த புகாரின் பேரில், வீடியோ வெளியிட்ட பெண்ணின் அண்ணன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமி 18 வயதுக்கு உட்பட்டவர் என்பதால் அந்த வீடியோவை மேற்கொண்டு பகிர வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.