தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 14-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக `பிரியாணி பற்றிய சமூக வலைதள சர்ச்சை… ஆரோக்கியத்தின் மீதான அக்கறையா? உணவை வைத்து செய்யப்படு மத அரசியலா?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
கெட்டபயகாளி
ஆரோக்கியம் ஆரோக்கியம் ஆரோக்கியம்
அப்துல் அஜிஸ்.
பிரியாணி என்னமோ ஃப்ரீயா நீ கொடுக்குற மாதிரி இருக்கு
. இது அரசியல். மக்கள் மீது அக்கறை என்பது வேறு உங்கள் எண்ணங்களை தினிப்பது என்பது வேறு. வேண்டும் என்றால் பசியில்லா தமிழகம் முயற்சி மேற்க்கொள்வோம்.
க.வீர செல்வம்
பிரியாணி என்பது நம் உணவுக் கலாச்சாரத்தோடு இப்போது இணைந்துவிட்ட ஒன்று…அதுவும் இன்றைய இளைய தலைமுறையின் விருப்ப உணவு…!எத்தனை புரளிகள் வந்தாலும் பிரியாணியை எங்களிடமிருந்து பிரிக்க முடியாது…!
Sampath Karuppaiah
கஞ்சி சோறு நல்லது என்பார்கள் அதே பாணியில் பிரியாணி சமையலும் குறிப்பாக சைவம் மற்றும் அசைவம் சேர்த்து செய்யும் பக்குவமான வடிகட்டாத சமையல் என்றுமே சிறப்பு,யார் பெரும்பான்மையாக சாப்பிடுகிறார்கள் என்பதை வைத்து மதவாதத்தை உண்ணும் உணவிலும் காட்டுதல் வெறுப்பு.
https://twitter.com/rmcrazyphoto/status/1503417670384771074
பிரியாணி மீதான தமிழர்களின் காதலை எந்தத் தீய சக்தியாலும் அழிக்க முடியாது.
ஜெயசுந்தர்
வேற ஒண்ணுமில்ல…பிரியாணிய பத்தி பேசி டைவ்ரட் ப்ணணிட்டுவேற எதையோ பெருசா பண்ண போறாங்க..அவ்ளோதான்..
M Vellaidhurai
நான் படித்தவரை, என் அறிவுக்கு எட்டிய வரை பிரியாணியின் வயது சுமார் 350 ஆண்டுகள், அது ஒரு காலத்தில் மன்னர்கள் உணவாக, அந்தப்புர விருந்தாக இருந்து வந்துள்ளது. பின்னர் சமையலறை ஊழியர்கள் வழியாக பரவி இன்று ஆடம்பர உணவு என்றாலே பிரியாணி என்றாகி விட்டது.350 ஆண்டுகளுக்கு முன் இந்திய மக்கள் தொகை வெறும் 6 கோடி மட்டுமே, இன்று சுமார் 135 கோடி. இதில் பிரியாணியும் புகுந்து விளையாடியது உண்மை தானே?. இதை வாழ வக்கத்த ஒரு தனி மனிதன் அவன் கையாலாகாத வெறுப்பை உணவின் மீது காட்டுவது மத அரசியல் அன்றி வேறென்ன?. வாழ்க பிரியாணி.
Dinesh Chinnadurai
தரமான எண்ணெய், மசாலா போன்ற பொருட்கள் கொண்டு செய்யப்படும் பிரியாணி ஒரு சமச்சீர் உணவு. புரதச்சத்து கொழுப்புச் சத்து மாவுச் சத்து நிறைந்த உணவு.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM