இந்தியாவில் மிகவும் பிரபலமான மேற்கத்திய உணவுகளில் ஒன்றான பீட்சா மீதான ஜிஎஸ்டி வரியில் புதிய மாற்றம் செய்ய ஹிரியானா முன்கூட்டியே தீர்ப்பு மேல்முறையீட்டு அதிகார அமைப்பு (AAAR) உத்தரவிட்டு உள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் விலைவாசி அதிகமாக இருக்கும் நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் தனது வரி விதிப்பு பலகையை மறு சீரமைப்பு செய்யவும், கீழ்தட்டு வரி அளவீட்டை உயர்த்த ஆலோசனை செய்து வருகிறது.
ரூ.7 டூ ரூ.59.. பென்னி ஸ்டாக்ஸ் கொடுத்த சூப்பர் சான்ஸ்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?
இந்த நிலையில் பீட்சா மீதான ஜிஎஸ்டி வரியில் மாற்றத்தை கொண்டு வரும் புதிய உத்தரவு, பீட்சா உணவை விரும்புவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீட்சா மீது 18% வரி
ஹிரியானா முன்கூட்டியே தீர்ப்பு மேல்முறையீட்டு அதிகார அமைப்பு (AAAR) வெளியிட்டுள்ள உத்தரவில் பீட்சா மீது போடப்படும் டாப்பிங் பீட்சா இல்லை, எனவே பீட்சா டாப்பீங் மீது 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.
பீட்சா பிராண்டுகள்
இந்த அறிவிப்பினால் பல முன்னணி பீட்சா பிராண்டுகள் எப்படி வரி விதிப்பது என்பதில் குழப்பம் அடைந்துள்ளது. குறிப்பாக ஹோட்டல் அல்லது ரெஸ்டாரென்ட் மற்றும் ஆன்லைன் டெலிவரி சேவை அளிக்கும் நிறுவனங்கள் மத்தியிலான வரி வித்தியாசத்தைக் கணக்கிடுவதில் குழப்பம் அடைந்துள்ளது.
வரி வித்தியாசம்
இந்தியாவில் பீட்சா மீது பல வரி விதிப்புகள் இருக்கிறது, இந்த வரி அனைத்தும் எப்படிப் பீட்சா சமைக்கப்படுகிறது, எப்படி விற்பனை செய்யப்படுகிறது என்பதை அடிப்படையாக வைத்து வித்தியாசப்படுகிறது.
வரி வித்தியாசம்
உதாரணமாகப் பீட்சா-வை ரெஸ்டாரென்ட்-ல் வாங்கி அங்கேயே சாப்பிட்டால் 5 சதவீத ஜிஎஸ்டி வரி, பீட்சா பேஸ்க்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது, இதே பீட்சா ஹோம் டெலிவரி செய்தால் கட்டாயம் 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.
மார்ச் 10 உத்தரவு
இந்நிலையில் மார்ச் 10ஆம் தேதி ஹிரியானா முன்கூட்டியே தீர்ப்பு மேல்முறையீட்டு அதிகார அமைப்பு (AAAR) வெளியிட்டுள்ள உத்தரவில் பீட்சா மீது போடப்பட்டும் டாப்பிங் அனைத்தும் சீஸ் டாப்பிங் எனக் கூறி ஓரே வரி விதிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் பீட்சா டாப்பிங்-ல் பல பொருட்கள் அடங்கியிருக்கும் காரணத்தால் அதிகப்படியாக 18 சதவீதம் விரி விதிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
Pizza topping is not pizza, so Pizza topping will attract 18 percent GST says Haryana AAAR
Pizza topping is not pizza, so Pizza topping will attract 18 percent GST says Haryana AAAR பீட்சா-க்கு வந்த புதிய பிரச்சனை.. இனி 18 சதவீத கூடுதல் ஜிஎஸ்டி வரி..!!