புடினின் நேட்டோ கோரிக்கையை ரஷ்யா ஏற்கலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சூசகமாக தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் உரையாற்றிய ஜெலன்ஸ்கி, நேட்டோ உறுப்புரிமைக்கு கதவு திறந்தில்லை என்பதை உக்ரைன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நேட்டோவில் இல்லை என்பதை உக்ரைன் புரிந்து கொள்கிறது என்று ஜனாதிபதி கூறினார்.
பேச்சுவார்த்தையில் முன்னேற்றங்கள் மிகவும் சிறப்பாக இருப்பதாக அவரது பேச்சுவார்த்தையாளர்கள் கூறியதாக நேற்று இரவு கருத்து தெரிவித்திருந்த ஜெலன்ஸ்கி, ஆனால் பார்ப்போம் என கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று நேட்டோ குறித்து ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே, நேற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உக்ரைன்-ரஷ்யா அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை, தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.