இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்து முதலீடு செய்த பல முன்னணி டெக் நிறுவனங்கள் தற்போது அதிகளவிலான நஷ்டத்தை அளித்து வருகிறது. இதற்கு மிக முக்கியமான காரணம் ஐபிஓ வெளியிட்ட பின்பு நிறுவனங்களின் வருமானம் மற்றும் லாப அளவீடுகள் குறைந்தும், தொடர்ந்து அதிகப்படியான நஷ்டத்தைப் பதிவு செய்வது தான்.
அமெரிக்கப் பங்குச்சந்தையில் டெக் நிறுவனங்கள் அதிகப்படியான ஆதிக்கம் செலுத்திய நிலையில் இந்தியச் சந்தையிலும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெரிய அளவில் ஆதிகம் செலுத்தும் என்று நம்பி முதலீடு செய்தவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் மட்டுமே இன்று வரையில் மிஞ்சியுள்ளது.
மீண்டும் சரிவை காணும் இந்திய ரூபாய்.. மீள வழியே இல்லையா?
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
பேடிஎம் -இன் தாய் நிறுவனமான ஓன்97 கம்யூனிகேஷன்ஸ், சோமேட்டோ, எப்எஸ்என் ஈகாமர்ஸ் ( நைகா-வின் தாய் நிறுவனம்), PB ஹோல்டிங்ஸ் பாலிசி பஜார்-ன் தாய் நிறுவனம் மற்றும் கார்டிரேட் டெக் ஆகியவற்றின் பங்குகளில் சமீபத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
ஐபிஓ
குறிப்பாக ஐபிஓ-வில் முதலீடு செய்த அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து விட்டு வெளியேறிய காரணத்தால் இந்நிறுவனங்களில் முதலீடு முதலீட்டாளர்கள் சுமார் 2.28 லட்சம் கோடி ரூபாய் அளவிலான இழப்பை எதிர்கொண்டு உள்ளனர்.
52 வார உயர்வு
தற்போது மேல குறிப்பிட்டு உள்ள நிறுவனங்களின் 52 வார உயர்விலிருந்து எந்த அளவிற்குச் சரிந்துள்ளது. எந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான நஷ்டத்தைக் கொடுத்துள்ளது என்பதைப் பார்ப்போம்.
பேடிஎம் பங்குகள்
மார்ச் 14ஆம் தேதி வர்த்தக முடிவில் பேடிஎம் பங்குகள் தனது 52 வார உயர்வில் இருந்து 65.59 சதவீதம் சரிந்து சுமார் 72,444 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டாளர்கள் பணத்தை விழுங்கியுள்ளது. இதன் மூலம் பேடிஎம் பங்கு விலை 2150 ரூபாய் அளவில் இருந்து 674.80 ரூபாயாகச் சரிந்துள்ளது.
பேடிஎம் பங்கு விலை
இன்றைய வர்த்தகத்தில் பேடிஎம் -இன் தாய் நிறுவனமான ஓன்97 கம்யூனிகேஷன்ஸ் பங்கு விலை 12.71 சதவீதம் சரிந்து வெறும் 589 ரூபாயாகக் குறைந்துள்ளது. செவ்வாய்கிழமை வர்த்தகத்தில் பேடிஎம் பங்குகள் 584.55 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.
சோமேட்டோ டூ கார்டிரேட் டெக்
பேடிஎம் நிறுவனத்தைத் தொடர்ந்து சோமேட்டோ பங்குகள் 53.10 சதவீதம் சரிந்து 63,833 கோடி ரூபாயும், எப்எஸ்என் ஈகாமர்ஸ் பங்குகள் 46.21 சதவீதம் சரிந்து 52777 கோடி ரூபாயும், PB பின்டெக் பங்குகள் 52.87 சதவீதம் சரிந்து 34,647 கோடி ரூபாயும், கார்டிரேட் டெக் 66.12 சதவீதம் சரிந்து 4,733 கோடி ரூபாயும் இழந்துள்ளது.
2,28,434 கோடி ரூபாய் இழப்பு
இதன் மூலம் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஓன்97 கம்யூனிகேஷன்ஸ், சோமேட்டோ, எப்எஸ்என் ஈகாமர்ஸ், PB பின்டெக், கார்டிரேட் டெக் ஆகிய 5 முக்கிய ஸ்டார்ட்அப் யூனிகார்ன் நிறுவனங்கள் சுமார் 2,28,434 கோடி ரூபாய் இழப்பை முதலீட்டாளர்களுக்குக் கொடுத்துள்ளனர்.
New-age companies eats 2.28 lakh crore investors wealth
New-age companies eats 2.28 lakh crore investors wealth புதிய டெக் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஏமாற்றம்.. ரூ.2.2 லட்சம் கோடி நஷ்டம்..!