மவுனமானால் விபரீதமே – திவ்யா துரைசாமி
டிவியில் செய்திவாசிப்பாளராக இருந்த திவ்யா துரைசாமி மாடலாகவும் வலம் வருகிறார். சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் பாலியல் ரீதியாக பாதித்த பெண்ணாக நடித்திருந்தார். இவர் கூறுகையில், ‛நமக்கு நடக்கும் அத்துமீறல்களை வெளியே சொல்லாமல் மவுனமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் தொடர்ந்து அத்துமீறல்கள் நடக்கிறது' என்கிறார் திவ்யா துரைசாமி. மேலும் ‛எனக்கும் பாலியல் ரீதியாக கொடுமை நடந்துள்ளதாக கூறியுள்ள இவர், அதை தைரியாக கடந்து வந்துள்ளேன்' என்கிறார்.