டெல்லி: மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். மக்களவையில் ரயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக எம்.பி. கனிமொழி பேசினார். கொரோனா காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக இருந்த கோச்கள் நீக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.
