மீன்பிடிப் படகுகளில் மீள் புதுப்பிக்கத்தக்க கலப்பு மின் பிறப்பாக்கி பொறிமுறையினை பொருத்துவது தொடர்பாக இந்தியத் தனியார் முதலீட்டாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
சூரியக் கலம் மற்றும் காற்றைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யக்கூடிய கலப்பு பொறிமுறையினை மீன்பிடிப் படகுகளில் பொருத்துவன் மூலம் எரிபொருள் செலவீனத்தினை கட்டுப்படுத்தி பெருமளவு பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், சூழல் மாசடைதலை தவிர்த்து, சுற்றுச்சூழல் நன்மைகளையும் பெற்றுக் கொள்ளமுடியும்.
இது தொடர்பாக தொடர்ந்து கலந்துரையாடி கடற்றொழிலாளர்களுக்கு நன்மை கிடைக்கும் வகையிலான வினைத்திறனான செயற்பாடுகள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்
இதனிடையே நண்டு வளர்ப்பு, இறால் வளர்ப்பு போன்ற நீர்வேளாண்மை ஊடான அபிவிருத்தியை விரைவுபடுத்தும் வகையில், குறித்த செயற்பாடுகளில் தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள அமைச்சர் நேற்று தனியார் முதலீட்டாளர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.