இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சுற்றுலாத்துறை 583 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ. 117.5 பில்லியன்) வருமானமாக பெற்றுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி, சுற்றுலாத்துறை ஜனவரியில் 268 மில்லியன் அமெரிக்க டொலர்களையும். பெப்ரவரியில் 314.5 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வருமானமாக பெற்றது. இருப்பினும் இதற்கு மாறாக 2021 ஆம் ஆண்டின் முதல் 2 மாதங்களிலும் 16.4 மில்லியன் அமெரிக்க டொலர் மட்டுமே பெறப்பட்டது.
இந்த ஆண்டு பெப்ரவரியில் 1 இலட்சத்து 78 ஆயிரத்து 834 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இது ஒரு வருடத்திற்கு முன்பு 5 ஆயிரத்து 47 ஆக இருந்தது.
மார்ச் 6 ஆம் திகதி வரை 2 இலட்சத்து 798 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், 2021 ஆம் ஆண்டில் 1 இலட்சத்து 94 ஆயிரத்து 495 சுற்றுலா பயணிகள் மட்டுமே இலங்கை வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
K. Sayanthiny