ரஷ்யாவில் செய்தி நேரலையின் போது உக்ரைன் மக்களுக்கு ஆதரவு பதாகையுடன் வந்த செய்தியாளரை போலீசார் கைது செய்தனர்.
செய்தி நேரலையின் போது திடீரென பெண் செய்தியாளர் ஒருவர் உக்ரைன் மக்களுக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பதாகையுடன் தோன்றினார்.
உக்ரைன் மீதான போர் ஒரு குற்றம் என்றும், மக்கள் பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம், ரஷ்யர்களே போருக்கு எதிராக உள்ளனர் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையுடன் பெண் செய்தியாளர் Maria Ovsyannikova தோன்றினார். இந்நிலையில் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக மாஸ்கோ நகர போலீசார் செய்தியாளரை கைது செய்தனர்.