உக்ரைனின் மரியுபோல் நகரில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய துருப்புகளை உக்ரைன் ராணுவத்தினர் தேடி தேடி வேட்டையாடும் வீடியோ காட்சி வெளியாகி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
உக்ரைன் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது தொடர்ந்து 20வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
உக்ரைனின் பெரும்பாலான முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் குறிவைத்து தாக்கி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் நிலையில், உக்ரைன் ராணுவத்தின் கடுமையான எதிர் தடுப்பு தாக்குதலால் தலைநகர் கீவ்வை ரஷ்ய படைகள் கைப்பற்ற முடியாமல் திணறி வருகின்றனர்.
Anton Gerashchenko published a video from #Mariupol – a #Ukrainian APC-4 is shooting at #Russian troops storming the city. One can see how close the battle is – Russian APC are shot from 200-300 meters. Mariupol is heroically defending itself in complete encirclement for 13 days! pic.twitter.com/vy0vVNnIH2
— NEXTA (@nexta_tv) March 14, 2022
இந்த நிலையில், உக்ரைனின் மற்றொரு முக்கிய நகரான மரியுபோலில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற ரஷ்ய படைகளை உக்ரைன் ராணுவத்தினர் APC-4 ரக டாங்கி தடுப்பு ஏவுகணை மூலம் சரமாரியாக சுட்டு அழித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்த வீடியோ ஆதாரத்தை உக்ரைனின் உள்விவகார துறையின் முதன்மை ஆலோசகர் Anton Gerashchenko வெளியீட்டு “போர் எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதை ஒருவரால் பார்க்கலாம்,ரஷ்ய படைகளை 200-300 மீட்டர் இடைவெளியில் சூட்டப்பட்டது” மரியுபோலில் 13 நாள்களாக நடத்தப்பட்டு வரும் எதிரிகளின் சுற்றி வளைப்பில் இருந்து இவ்வாறு தான் வீரமாக பாதுகாத்து கொள்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.