சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இதற்கிடையே விடுதலை கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. பேரறிவாளன் ஏற்கனவே பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால் ஜாமின் வழங்கும்படி அதில் கோரப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளன் ஜாமினில் வெளியே வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், பிணை ஒரு இடைக்கால நிவாரணம். நீதிக்கான எங்கள் போராட்டத்திற்கு துணை நிற்கும் முதல்வருக்கு நன்றி. பேரறிவாளனுக்கு ஜாமின் கிடைக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்…தமிழகத்தில் 31 லட்சம் சிறுவர்களுக்கு பள்ளியில் தடுப்பூசி போட ஏற்பாடு