இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகப் பார்க்கப்படும் ரிலையன்ஸ் ரீடைல் – பியூச்சர் ரீடைல் வர்த்தகப் பரிமாற்றத்தை அமேசான் நிறுவனம் அடுத்தடுத்து வழக்கு தொடுத்து நிறுத்தி வரும் நிலையில், 18 மாதங்கள் போராட்டத்திற்குப் பின்பு பியூச்சர் ரீடைல் – அமேசான் கடந்த வாரம் நீதிமன்றத்திற்கு வெளியில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையைச் சரி செய்துகொள்கிறோம் எனக் கூறியது.
தடுமாறும் சென்செக்ஸ்.. பங்குச்சந்தையை வாட்டும் 3 முக்கியப் பிரச்சனை..!
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுகளை இன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் நிலையில் அமேசான் இன்று செய்தித்தாளில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு எதிராகப் பப்ளிக் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பியூச்சர் ரீடைல்
பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் கடைகளை மிகவும் ரகசியமான முறையில் ரிவையன் இண்டஸ்ட்ரீஸ் கைப்பற்றியுள்ளது. இந்திய நீதிமன்றம் மற்றும் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் அமைப்புத் தடை ரிலையன்ஸ் ரீடைல் – பியூச்சர் குரூப் ஒப்பந்தத்திற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையிலும் கைப்பற்றியுள்ள விதிமீறல் என அமேசான் குற்றம் சாட்டியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிராடு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பியூச்சர் குரூப் சொத்துக்களை இந்திய நீதிமன்றம், நடுவர் மன்றம் மற்றும் இந்திய அரசு அதிகாரிகள்/ஏஜென்சிகளுக்குத் தெரியாமல் கைப்பற்றிப் பிராடு செய்துள்ளது என அமேசான்.காம் NV இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்க்ஸ் LLC நிறுவனம் செவ்வாய்க்கிழமை செய்தித்தாள்களில் பப்ளிக் நோட்டீஸ் வெளியிட்டு உள்ளது.
தடை உத்தரவு
ஃபியூச்சர் குழுமத்தின் சொத்துக்களை ரிலையன்ஸ் ரீடெய்லுக்கு விற்க முன்மொழியப்பட்ட 25,000 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்த சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையத்தின் (SIAC) அக்டோபர் 2020 அவசர உத்தரவை வெளியிட்டு உள்ள நிலையில், இந்த உத்தரவை மீறும் வகையில் பியூச்சர் ரீடைல் சொத்துக்களை ரிலையன்ஸ் கைப்பற்றி வருகிறது என அமேசான் எச்சரித்தது.
950 கடைகள்
ஃபியூச்சர் குழுமத்தின் சொத்துக்கள் மற்றும் வர்த்தகக்தை கைப்பற்ற ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் அமேசான் போட்டிப்போட்டு வரும் நிலையில், மார்ச் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சனையைச் சரி செய்யத் திட்டமிட்ட வேளையில் தான் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் ஏற்கனவே 200 பியூச்சர் குரூப் ரீடைல் கடைகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், 950 கடைகளுக்கான ஒப்பந்தத்தை ரத்துச் செய்து நோட்டீஸ் அனுப்பியது.
பப்ளிக் நோட்டீஸ்
இதன் பின்பு நடந்த பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை எனத் தகவல் வெளியான நிலையில், தற்போது அமேசானின் பப்ளிக் நோட்டீஸ் அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. இதன் மூலம் இன்றைய நீதிமன்ற விசாரணை 3 நிறுவனங்கள் மத்தியிலான பேச்சுவார்த்தை முடிவுகள் தெரிவிக்கப்படும்.
Amazon calls Actions of Reliance is “Fraud” issued “Public Notice” on Newspaper Ads
Amazon calls Actions of Reliance is “Fraud” issued “Public Notice” on Newspaper Ads ரிலையன்ஸ் செய்வது பிராடு வேலை.. அமேசான் வெளியிட்ட அதிரடி விளம்பரம்..!