ரிலையன்ஸ் ரீடைல் – பியூச்சர் குரூப் – அமேசான் மத்தியிலான வழக்கு 18 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் மார்ச் 3ஆம் தேதி இப்பிரச்சனையைப் பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப் பியூச்சர் குரூப் – அமேசான் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், அனைத்து தரப்பினரும் விரைவில் இந்தப் பிரச்சனை சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகப்பெரிய குண்டை போட்ட காரணத்தால் மொத்தமும் தலைகீழாக மாறியது.
நீதிமன்றம் ரிலையன்ஸ் ரீடைல் – பியூச்சர் குரூப் – அமேசான் மத்தியிலான பேச்சுவார்த்தைக்கு 12 நாள் அவகாசம் கொடுத்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ரிலையன்ஸ் செய்வது பிராடு வேலை.. அமேசான் வெளியிட்ட அதிரடி விளம்பரம்..!
அமேசான் வழக்கு
ரிலையன்ஸ் ரீடைல் – பியூச்சர் குரூப் மத்தியிலான வர்த்தக விற்பனை ஒப்பந்தம் எதிராக அமேசான் வழக்குத் தொடுத்த நிலையில், பியூச்சர் குரூப் வாடகை கொடுக்காத 200 கடைகளையும் ஊழியர்களையும் ரிலையன்ஸ் கைப்பற்றிய நிலையில், 18 மாதங்களுக்குப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது அமேசான்.
ரிலையன்ஸ் ரீடைல்
இதற்கிடையில் ரிலையன்ஸ் ரீடைல் கட்டுப்பாட்டில் இருந்து 950 பியூச்சர் குரூப் கடைகளின் ஒப்பந்தத்தை ரத்து செய்த நிலையில், இந்தக் கடைகளை எவ்விதமான பிரச்சனையுமின்றி ரிலையன்ஸ் கைப்பற்றும் வாய்ப்பை பெற்றுள்ளது. இதனால் ரிலையன்ஸ் ரீடைல் – பியூச்சர் குரூப் – அமேசான் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தை பெரும் தோல்வியைச் சந்தித்தது.
பேச்சுவார்த்தை தோல்வி
இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையில் பியூச்சர் குரூப் – அமேசான் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் இரு நிறுவனமும் சிங்கப்பூர் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர விருப்பம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமேசான் தனது இறுதி முடிவைப் புதன்கிழமை வெளியிட தெரிவிக்க உள்ளது.
பப்ளிக் நோட்டீஸ்
மேலும் அமேசான் இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பியூச்சர் குரூப் சொத்துக்களை இந்திய நீதிமன்றம், நடுவர் மன்றம் மற்றும் இந்திய அரசு அதிகாரிகள்/ஏஜென்சிகளுக்குத் தெரியாமல் கைப்பற்றிப் பிராடு செய்துள்ளது என அமேசான்.காம் NV இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்க்ஸ் LLC நிறுவனம் செவ்வாய்க்கிழமை செய்தித்தாள்களில் பப்ளிக் நோட்டீஸ் வெளியிட்டு உள்ளது.
CAIT அமைப்பு
அமேசானின் பொது அறிவிப்பின் உள்ளடக்கங்கள் தவறானவை என்றும் அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) கூறுகிறது. மேலும் அமேசான் தனது பொது அறிவிப்பில் அறிவிக்கப்பட்டவை நகைப்பிற்குரியவை என CAIT தெரிவித்துள்ளது.
Amazon, Future talks failed, plans to resume arbitration proceedings in Singapore
Amazon, Future talks failed, plans to resume arbitration proceedings in Singapore ரிலையன்ஸ் – பியூச்சர் குரூப் – அமேசான்: பேச்சுவார்த்தை தோல்வி.. மீண்டும் வழக்கு..!