டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது இன்னும் மோசமான சரிவினைக் காணலாம் என எஸ்பிஐ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையேயான மோதலானது இன்று வரையிலும், தொடந்து அதிகரித்த வண்ணமே இருந்து வருகின்றது.
இது சர்வதேச அளவில் ஏற்கனவே பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சப்ளை சங்கிலியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக, பல அத்தியாவசிய பொருட்களின் விலையானது வரலாறு காணாத உச்சத்தினை எட்டியுள்ளது.
மீண்டும் சரிவை காணும் இந்திய ரூபாய்.. மீள வழியே இல்லையா?

தொடர் சரிவில் ரூபாய்
குறிப்பாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது மோசமான சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையே விரைவில் சுமூக நிலை எட்டப்படலாம் என்றாலும், தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகின்றது. இது தொடர்ந்து தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற நிலையில் ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.

பொருளாதாரத்தில் தாக்கம் இருக்கலாம்
இது குறித்து நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ கணித்துள்ளது. இது குறித்து எஸ்பிஐ குழுமத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் செளமியா காந்தி கோஷ், ரஷ்யா – உக்ரைன் இடையேயான வார் தொடர்ந்தால் அது, இந்தியாவில் தாக்கத்தினை ஏற்படுத்தும. இது இந்திய ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தும் கணித்துள்ளது.

எவ்வளவு சரியலாம்
குறிப்பாக இந்திய ரூபாயின் மதிப்பு ஜூன் மாத இறுதிக்குள் 77.5 ரூபாயாக சரிவடையலாம். எனினும் அது டிசம்பர் மாத இறுதியில் 77 ரூபாயாக மீள்ச்சி கண்டிருக்கும் என்றும் எஸ்பிஐ ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. எனினும் சராசரியாக இந்திய ரூபாய் மதிப்பானது 76 – 78 ரூபாயாக இருக்கலாம்.

நடப்பு கணக்கு பற்றாக்குறை
மேலும் மேற்கண்ட பல காரணிகளுக்கும் மத்தியில் கச்சா எண்ணெய் விலையும் சமீபத்தில், பேரலுக்கு 130 டாலர்களையும் எட்டியது. இது நடப்பு கணக்கு பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தினையும் 7.1% ஆக சரிய காரணமாக அமையலாம். வளர்ந்து வரும் சந்தைகளில் கரன்சிகள் சரிவில் ரூபாயின் மதிப்பானது மோசமான சரிவினைக் கண்டுள்ள நிலையில், இது இன்னும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
Russia – Ukraine crisis! SBI expects Rupee at low of Rs.77.5
russia – Ukraine crisis! SBI expects Rupee at low of Rs.77.5/ரூபாய் மதிப்பு இன்னும் மோசமாக சரியலாம்.. எஸ்பிஐ எச்சரிக்கை..!