ரூ.1.5 லட்சம் வரை வரி சலுகை.. வங்கி வட்டியை விட அதிக வருமானம்.. 5 ஆண்டுகள் மட்டுமே முதலீடு..!

என்.எஸ்.சி. எனப்படும் தேசிய சேமிப்பு பத்திர திட்டம்(National Savings Certificate), நாட்டில் உள்ள அனைத்து அஞ்சலகத்திலும் பெறக்கூடிய திட்டமாகும். இது ஒரு நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு முதலீட்டு திட்டமாகும்.

தேசிய சேமிப்பு பத்திரம் என்பது பாதுகாப்பான மற்றும் அதே வேளையில் ரிஸ்க் குறைவாக கொண்ட திட்டமாக கருதப்படுகிறது.

தங்கத்திற்கு சூப்பர் தள்ளுபடி.. 6 ஆண்டுகளில் இல்லாதளவு உச்சம்.. ஜாக்பாட் தான்!

இந்த திட்டத்திற்கு தற்போது 6.8% வட்டியாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 10.7 ஆண்டுகளில் உங்களது முதலீடு இருமடங்காகும்.

 வரிச் சலுகை எப்படி?

வரிச் சலுகை எப்படி?

இந்த திட்டத்தில் வரிச்சலுகையும் 80சியின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையில் கிடைக்கிறது. அதோடு வட்டி விகிதமும் 6.8% ஆகக் கிடைக்கிறது. சொல்ல்போனால் நாட்டின் முன்னணி வங்கிகளில் கூட அதிகபட்ச வட்டியே 6% ஆகத் தான் உள்ளது. ஆக அப்படியிருக்கும்பட்சத்தில் ரிஸ்க் இல்லாத, வருமானம் அதிகமுள்ள தேசிய சேமிப்பு பத்திரங்கள் முதலீட்டுக்கு ஏற்ற திட்டங்களாக பார்க்கப்படுகிறது.

யாருக்கெல்லாம் ஏற்றது?

யாருக்கெல்லாம் ஏற்றது?

பொதுவாக இதுபோன்ற ரிஸ்க் இல்லாத திட்டங்கள், புதியதாக முதலீடு செய்ய நினைப்பவர்கள், வருமானம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, ரிஸ்க் வேண்டாம் என நினைப்பவர்கள், வயதானோர் என அனைவரும் முதலீடு செய்து கொள்ள ஏற்றதொரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் வரி சலுகைகளுக்காகவும் இந்த திட்டத்தினை தேர்தெடுக்கலாம்.

நிரந்தர வருமானம்
 

நிரந்தர வருமானம்

பங்கு சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகளை போல வருமானத்தில் ஏற்றத் தாழ்வு இல்லை. குறிப்பாக முதலீட்டுக்கு எந்த பங்கமும் இல்லை. இந்த திட்டத்தில் உதாரணத்திற்கு நீங்கள் 1000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். 5 ஆண்டுகள் கழித்து முதிர்வுக்கு பிறகு 1389 ரூபாயாக கிடைக்கும். இதே 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 13.89 லட்சம் ரூபாய் முதிர்வு தொகையாக கிடைக்கும்.

இடையில் முடித்துக் கொள்ளலாமா?

இடையில் முடித்துக் கொள்ளலாமா?

இதில் 80சின் கீழ் வரிச்சலுகை இருந்தாலும், முதிர்வின்போது கிடைக்கும் வருமானத்திற்கு வரி உண்டு. டிடிஎஸ் பிடித்தம் செய்யபடுவதில்லை.

இந்த கணக்கினை மூன்று காரணங்களுக்காக முன் கூட்டியே முடித்துக் கொள்ளலாம். ஒன்று ஜாய்ண்ட் அக்கவுண்ட்டாக தொடங்கியிருந்தால், அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து விட்டால் இடையில் முடித்துக் கொள்ளலாம். கோர்ட் ஆர்டர் இருந்தாலும் முடித்துக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Want to turn Rs.10 lakh into Rs.14 lakh into in five years: Eligibility, Interest Rate & Tax Saving Benefits

Want to turn Rs.10 lakh into Rs.14 lakh into in five years: Eligibility, Interest Rate & Tax Saving Benefits/ரூ.1.5 லட்சம் வரை வரி சலுகை.. வங்கி வட்டியை விட அதிக வருமானம்.. 5 ஆண்டுகள் மட்டுமே முதலீடு..!

Story first published: Tuesday, March 15, 2022, 19:09 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.