சீனாவின் சியோமி நிறுவனம், தொடர்ந்து பல ஸ்மார்ட்போன்களை தனது கிளை பிராண்டுகளின் பெயரில் அறிமுகம் செய்துவருகிறது. கடந்த வாரம் ரெட்மி நோட் 11 ப்ரோ, ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் ஆகிய இரு ஸ்மார்ட்போன்களை இந்திய டெக் சந்தையில் அறிமுகம் செய்தது.
தற்போது புதிய
Redmi
10C ஸ்மார்ட்போனை உலகளவில் அறிமுகம் செய்துள்ளது. 4ஜி இணைப்புடன் இந்த ஸ்மார்ட்போன் டெக் சந்தையில் இடம்பிடித்துள்ளது. இந்த புதிய 4ஜி ஸ்மார்ட்போன், இந்தியாவில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில்
ரெட்மி 10
என்ற பெயரில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது உலக டெக் சந்தையில் வெளியாகியுள்ள இந்த ரெட்மி 10 சி ஸ்மார்ட்போன், திறன்வாய்ந்த ஸ்னாப்டிராகன் புராசஸர் கொண்டுள்ளது.
பக்கா பட்ஜெட் புராசஸர் – Realme அறிமுகம் செய்த 9 SE 5G போன்!
ரெட்மி 10 சி அம்சங்கள் (Redmi 10C Specification)
புதிய ரெட்மி போனில், 6.71″ அங்குல முழு அளவு எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. செயல்திறனுக்காக 6nm நானோ மீட்டரில் கட்டமைக்கப்பட்ட
Qualcomm Snapdragon
680 4ஜி சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், Adreno 610 கிராபிக்ஸ் எஞ்சினாக செயல்படுகிறது. புதிய புராசஸர் என்பதால், நல்ல திறனை குறைந்த சக்தியுடன் வெளிப்படுத்தும் என நம்பலாம்.
Android
11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட MIUI 13 ஸ்கின் இதில் நிறுவப்பட்டுள்ளது. இரண்டு வேரியண்டுகள் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில நேரங்களில் இந்தியாவிற்கென தனி அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை ரெட்மி அறிமுகம் செய்ய வாய்ப்பிருக்கிறது.
Sony Xperia ஜப்பானுக்கு மட்டும் தானா; எங்களுக்கு இல்லையா!
கேமராவை பொருத்தவரை, பின்பக்கம் இரு சென்சார்கள் கொண்ட அமைப்பை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது. அதில் முதன்மை சென்சாராக 50 மெகாபிக்சலும், கூடவே 2 மெகாபிக்சல் லென்ஸும் பயன்படுத்தப்பட்டுள்ளது. செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக வைட் ஆங்கில் 5 மெகாபிக்சல் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.
ரெட்மி 10 சி விலை (Redmi 10c price in India)
புதிய ரெட்மி ஸ்மார்ட்போனானது, ப்ளூடூத் 5.1, 3.5mm ஜாக், ஜிபிஎஸ் போன்ற ஆதரவுகளையும் கொண்டிருக்கும். ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 10W பாஸ்ட் சார்ஜர் போனுடன் வருகிறது. கறுப்பு, நீலம், பச்சை ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் இந்த 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரெட்மி 10 சி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மெமரி வேரியண்டும், 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மெமரி வேரியண்டும் உலக சந்தையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது முறையே இந்தியாவில் பேஸ் வேரியண்ட் 12,949 ரூபாய்க்கும், ஹை வேரியண்ட் 14,949 ரூபாய்க்கும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் வெளியீடு மார்ச் 17ஆம் தேதி இருக்கும் என டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
Read more:
108MP கேமரா; AMOLED டாட் டிஸ்ப்ளே; 5G இணைப்பு – Redmi போன்
நம்பமுடியாத விலையில்; சிறந்த லேப்டாப்கள் – Flipkart பிக் சேவிங்க்ஸ் டே