ரொமான்ஸ் போட்டோக்களை வெளியிட்ட பூஜா
டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய பூஜா, ‛காதலில் சொதப்புவது எப்படி' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மலையாளம், தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். வீஜே.,வான கிரேக் என்பவரை காதலித்து மணந்த பூஜா பின் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார். பின்னர் நடிகர் ஜான் கோகென் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜான் தமிழில் வீரம் படத்தில் அஜித்தின் நான்கு தம்பிகளில் ஒருவராக நடித்தார். அதன்பிறகு கடந்தாண்டு வெளியான சார்ப்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது சில படங்களில் நடிக்கிறார்.
|
சமூகவலைதளத்தில் பூஜா எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குபவர். தொடர்ந்து கவர்ச்சியான படங்களை பதிவிடுவார். அதிலும் கணவர் ஜான் உடன் இணைந்து பிட்னஸ் செய்யும் போட்டோக்களை அதிகமாக வெளியிடுவார். மேலும் ஜான் உடன் இணைந்து நிறைய போட்டோ ஷூட்டுகளும் செய்துள்ளார். சமீபத்தில் தங்களது விடுமுறையை இருவரும் கொண்டாடி உள்ளனர். கடற்கரை ஒன்றில் கணவர் ஜான் உடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களை வெளியிட்டு தங்களின் மகிழ்ச்சியையும், காதலின் வெளிப்பாட்டையும் பகிர்ந்துள்ளார் பூஜா. இந்த போட்டோக்கள் வைரலாகின.