கரியாபந்த்:
சத்தீஸ்கர் மாநிலம், கரியாபந்த் மாவட்டம் ஜோபா கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த டிராக்டர் மீது லாரி மோதியது. இதில் அந்த டிராக்டருடன் இணைக்கப்பட்டிருந்த வண்டியில் இருந்த 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்ததாக கரியாபந்த் மாவட்ட காவல்துறை அதிகாரி விஸ்வாதிப் யாதவ் தெரிவித்தார். மஜ்ரகட்டா கிராமத்தை சேர்ந்த சிலர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டு டிராக்டரில் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த கோர விபத்தை
சந்தித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்… கோவை அருகே மின்கசிவால் புகைமூட்டம்: தாய்- 2 மகள்கள் பலி