தமிழகத்தில் செயல்படும் வங்கிகளில் இந்தி, ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக தமிழும் இடம்பெறும் என மத்திய நிதித்துறை தெரிவித்துள்ளது.
மக்களவையில் பேசிய திமுக உறுப்பினர் கதிரவன், தமிழகத்தில் வங்கிச் சேவைகளில் தமிழ்மொழி பயன்பாடு குறித்த கேள்வியை முன் வைத்தார். இதற்கு மத்திய நிதித்துறை விரிவான பதிலை வழங்கியது. அதில், வங்கி சேவைகளை தமிழிலும் வழங்க முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. வங்கிகளில் உள்ள அனைத்து கவுன்ட்டர்களிலும் இந்தி, ஆங்கிலம் தவிர தமிழிலும் அறிவிப்பு பலகைகள் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிச் சேவைகள், வசதிகள் குறித்த விவரங்களும் தமிழ் மொழியில் சிறு புத்தகங்களாக அச்சிடப்பட்டு வெளியிடப்படும் என்றும், படிவங்கள், வங்கி கணக்கு புத்தகங்களிலும், இந்தி, ஆங்கிலத்தை தொடர்ந்து தமிழ் மொழி இடம் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM