பணம் கொடுக்கல் வாங்கலில் சலூன் கடைக்காரர் கொலை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் சசிகுமார். இவர் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கும் தொழிலையும் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு சசிகுமார் வீட்டிற்கு சென்று இரண்டு பேர் அவரை வெளியே வரவழைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் இருந்த சசிகுமாரை உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த கொலையில் தொடர்புடையதாக இளங்கோ என்ற இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது ராம்கி இளங்கோவும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகின்றனர் எனவும் அவர்களிடம் இருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணம் வாங்கிய சசிகுமார் அதனை திருப்பி தராமல் இழுத்தடித்து வைத்ததாக கூறப்படுகிறது.
எனவே அவரை கொலை செய்ததாக இருவரும் ஒப்புக் கொண்டனர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.