பெங்களூரு-வாக்காளர் அடையாள அட்டை பெறும் நடைமுறையை, மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்தும், வாக்காளர் அடையாள அட்டையில் குளறுபடிகள் குறையவில்லை. பெயர், முகவரி, முகம் தவறாக உள்ளது.வாக்காளர்கள் எளிதாக, வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டுமென்ற நோக்கில், ஆன்லைனில் மனு தாக்கல் செய்வது உட்பட, பல விதமான நடவடிக்கைகளை, அரசு செயல்படுத்தியுள்ளது. ஆனால் இதற்கு முன் நடந்த தவறுகள் தொடர்கிறது.வாக்காளர் அட்டையில் பெயர், முகவரி தவறாக அச்சாகிறது. பெரும்பாலான அட்டைகளில், பெயர் மாறியுள்ளது. ஆங்கிலத்தில் சரியாக இருக்கும் முகவரி, கன்னடத்தில் தவறாக அச்சிடப்பட்டுள்ளது. தந்தை, கணவரின் பெயரும் கூட தவறாக உள்ளது.இதற்கு முன் வாக்காளர் அட்டைக்காக, வார்டு அலுவலகங்களிலேயே, விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. இதனால் பாஸ்போர்ட் போட்டோக்களை மட்டும் கொடுத்தனர். ஆன்லைன் வசதி வந்த பின், முகநுாலில் பதிவேற்றம் செய்யும் போட்டோக்களை, வாக்காளர் அட்டைக்காக பதிவேற்றம் செய்துள்ளனர். பெரும்பாலான அட்டைகளில் முகமே சரியாக தென்படுவதில்லை.புதிதாக வாக்காளர் அடையாள அட்டை பெற்று, இரண்டு ஆண்டுகளுக்கு பின் அதை பரிசீலிக்கும் போது, பெயரே மாறியுள்ளது.பெயரை திருத்தம் செய்வதற்காக, மனு தாக்கல் செய்து எட்டு மாதங்களாகியும், மாற்றம் செய்யவில்லை. அதிநவீன தொழில்நுட்பம் வந்துள்ள, இத்தகைய காலத்திலும் தவறுகள் நடக்கிறது.அடையாள அட்டைக்காக, மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.பெங்களூரு மாநகராட்சியின் தேர்தல் பிரிவு அதிகாரி சீனிவாஸ் கூறுகையில், ”வாக்காளர் அடையாள அட்டையில் சிறுசிறு தவறுகள் சகஜம். இதை திருத்திக்கொள்ள விண்ணப்பித்தால், இலவசமாக செய்து தரப்படும். இதுபற்றி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார்.
Advertisement