சென்னை: வாக்குசீட்டுகளை எடுத்துச்சென்றவரை தடுக்காத விவகாரத்தில் ஆணையம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்று என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தல் அதிகாரியும், காவல்துறையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். வீடியோ பதிவுகளை ஆய்வு செய்த பின்னர் மாநில தீர்த்தால் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
