ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர்
அஜித்
நடிப்பில் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியான படம் வலிமை. உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படம் பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்றதோடு வசூலையும் வாரி குவித்தது.
இதனை தொடர்ந்து அஜித்தின் 61 வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அந்த படத்தையும் ஹெச் வினோத்தான் இயக்கவுள்ளார். மேலும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கிய போனி கபூர்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளார்.
புண்பட்ட மனசை புகைப்போட்டு ஆத்தும் ‘ஸ்ட்ரிக்ட்’ இயக்குநர்… ச்சு கொட்டும் கோடம்பாக்கம்!
இப்படத்தில் அஜித்தின் கதாப்பாத்திரம் குறித்த லுக் நெகட்டிவாக வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைத்ராபாத்தில் நடக்கவுள்ளதாகவும் இதற்காக பிரத்யேகமாக செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. மேலும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது.
நாளுக்கு நாள் கூடும் அழகு… செல்வராகவனின் மாஜி மனைவி போட்டோஸ்!
இந்நிலையில் அஜித்தின்
ஏகே 62
படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அஜித்தின் ஏகே 62 படத்தை
விக்னேஷ் சிவன்
இயக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கு
அனிருத்
இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை
நயன்தாரா
நடிக்கவுள்ளதாகவும் வெளியாகியுள்ளது.
பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்க வேண்டாமா? அஜித் ரசிகர்களை விடாமல் சீண்டும் ப்ளூ சட்டை!
அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அஜித்தின் பிறந்தநாளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக ஏகன், ஆரம்பம், பில்லா மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து நடிப்பதை அறிந்த ரசிகர்கள் செம்ம ஹேப்பியாகியுள்ளனர்.
எனக்கு நம்பிக்கையே இல்ல..என் மனச மாத்தீட்டாங்க – மதன் கார்க்கி Open Talk!