60 வகையான அத்தியாவசிய மருந்து பொருட்களின் அதிகபட்ச விலையை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சரினால் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, 500 மில்லிகிராம் பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் அதிகபட்ச விலை 2 ரூபா 97 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானியில், 500 மில்லிகிராம் பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் அதிகபட்ச விலை 2 ரூபா 30 சதமாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், புதிய வர்த்தமானியில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மருந்துப்பொருட்களின் விலையினை 29 சதவீதத்தால் உயர்த்துவதற்கு ஒளடத விலை கட்டுப்பாட்டு சபை கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியிருந்தது.
அதற்கமைய, மருந்து வகைகளின் விலைத்திருத்தம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.