இதுவரையில் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாமல் வெளிநாடு செல்ல எதிர்பார்த்துள்ள நபர்களுக்கு இன்று தொடக்கம் பைசர் டோஸ் 3 பெற்றுக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பைசர் 3 ஆவது டோஸாக பெற்றுக்கொள்ள முடிகின்றமை பூஸ்டர் மருந்தே ஆகும்.
இதற்கமைவாக தொழில் காப்புறுதியுடன் அல்லது கல்வி நடவடிக்கைகளுக்காக வெளியேறும் எந்தவொரு நபரும் இந்த தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை அவுஸ்ரேலியா செல்லும் நபர்களுக்காக 4 ஆவது டோஸ் ஆக பைசர் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியா சைனோபாம் தடுப்பூசியை ஏற்றுக்கொள்ளாமையே இதற்கு காரணமாகும்.
இதற்கு அமைவாக சைனோபாம் தடுப்பூசி 2 ஐ பெற்றுக் கொண்ட நபர்களுக்கு மேலும் பைசர் தடுப்பூசி 2 ஐ பெற்றுக்கொள்ள முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்ரேலியாவின் கோரிக்கைக்கு அமைவாக தற்பொழுது அந்த நாட்டுக்காக மாத்திரம் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
ஏனைய நாடுகளில் இருந்தும் இந்த கோரிக்கை கிடைக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.