ஸ்ரீநகர்:
ஹிஜாப் விவகாரம் குறித்த பல்வேறு மனுக்களை கர்நாடக் ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஹிஜாப் இஸ்லாமிய சமுதாயத்தின் ஓர் அங்கமாக இல்லை. அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே. எனவே ஹிஜாப் அணிவதற்கான தடை உத்தரவு தொடரும் என கர்நாடக ஐகோர்ட் இன்று தீர்ப்பு அளித்தது.
இந்நிலையில், ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, ஹிஜாப் அணிவதற்கான தடை தொடரும் என்ற கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஹிஜாப் மீதான தடை மிகவும் ஏமாற்றமளிக்கிறது. ஒருபுறம் பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் அதிகாரமளித்தல் குறித்து பெரிய கோரிக்கைகளை முன்வைக்கிறோம். மற்றொரு புறம் அவர்கள் விரும்பும் ஆடைகளை அணியும் உரிமையைக் கூட நாம் வழங்குவதில்லை. இந்த உரிமை நீதிமன்றங்களுக்கு இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்…சாலை விபத்தில் மரணம்- பிச்சைக்காரர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய 4 ஆயிரம் பேர்