ஹிஜாப் விவகாரம் : உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்றம், ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என தீர்ப்பளித்தது. மேலும், ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளையும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் 6 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.