12-14 வயது சிறார்களுக்கு மார்ச் 25-க்குள் தடுப்பூசி செலுத்திட உத்தரவு| Dinamalar

புதுடில்லி: புதுடில்லி : நாடு முழுதும், 12 – 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் பணி மார்ச் 16-ல் துவங்கி மார்ச் 25 க்குள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளதாவது, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. ஏற்கனவே 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்படுகின்றது.
இந்நிலையில் 12-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் பணி நாளை (மார்ச்.16) துவங்கி மார்ச் 25 க்குள் நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு பொது சுகாதாரத்துறையினர் நேரில் சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள் வெளியீடு

மத்திய சுகாதார அமைச்சகம் கூறிஉள்ளதாவது:கடந்த, 2010 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும். தடுப்பூசி வழங்கும் தேதியில், 12 வயது நிரம்பியிருக்க வேண்டும்.கடந்தாண்டு மார்ச், 1 நிலவரப்படி, 12 மற்றும் 13 வயது நிரம்பியோர், 4.7 கோடி பேர் உள்ளனர். இவர்களுக்கு, ‘கோர்பேவாக்ஸ்’ என்ற தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். 14 முதல் 15 வயதுக்குட்பட்டோர், 15 – 18 வயதுப் பிரிவில் வருவர். அவர்களுக்கு, இந்த தடுப்பூசி வழங்கக் கூடாது.’கோவின்’ இணையதளத்தில் பதிவு செய்தும், முகாம்களில் நேரடியாக பதிவு செய்தும் தடுப்பூசி வழங்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.