20 21 ஆம் ஆண்டிற்க்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 1271 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களில் இருந்து கடந்த ஆண்டு 9726 மாணவர்கள் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் அதில் இம்முறை சுமார் 1271 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.
இதனடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலையத்தில் இருந்து 2051 மாணவர்கள் பரீட்சைக்கு தகுதிபெற்றிருந்த நிலையில் 449 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன், விசேட தேவையுடைய 3 மாணவர்கள் விசேட சித்தியடைந்துள்ளனர். அத்தோடு மட்டக்களப்பு மத்திய கல்வி வலையத்தில் 3200 மாணவர்கள் பரீட்சைக்கு தகுதிபெற்றிருந்த நிலையில் 459 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், ஒரு மாணவர் விசேட தேவையுடைய வகைக்குள் சித்தியடைந்துள்ளார்.
பட்டிருப்பு கல்வி வலையத்தில் 1609 மாணவர்கள் பரீட்சைக்கு தகுதிபெற்றிருந்த நிலையில் 172 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், கல்குடா கல்வி வலையத்தில் 1800 மாணவர்கள் பரீட்சைக்கு தகுதிபெற்றிருந்த நிலையில் 131 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், மண்முனை மேற்கு கல்வி வலையத்தில் 1066 மாணவர்கள் பரீட்சைக்கு தகுதிபெற்றிருந்த நிலையில் 60 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், ஒரு மாணவர் விசேட தேவையுடைய வகைக்குள் சித்தியடைந்துள்ளார்.
அத்தோடு கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் மாவட்டத்திலிருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் ஐந்து மாணவர்கள் சித்தியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Media Unit, – Batticaloa ஊடகப்பிரிவு-
மட்டக்களப்பு Tel – 065 2225769