3 கோடி மக்களை.. மொத்தமாக வீட்டோடு முடக்கிய சீனா.. என்னாச்சு??

சீனாவின் பல நகரங்களிலும் தீவிரமான
லாக்டவுன்
போடப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 3 கோடி மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். எல்லாத்துக்கும் காரணம், மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்தான்.

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியுள்ளது. இதையடுத்து சீனா லாக்டவுனைக் கையில் எடுத்துள்ளது. வீடு வீடாக சென்று டெஸ்ட் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அது மேற்கொண்டுள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று சீனாவில் புதிதாக 5280 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்ட்டது. இது திங்கள்கிழமை ஏற்பட்ட தொற்றை விட 2 மடங்கு அதிகமாகும். இதனால்தான் சீனா பீதியடைந்துள்ளது. அதிக வேகத்தில் பரவக் கூடிய ஓமைக்ரான்தான் தற்போது சீனாவில் மீண்டும் பரவி வருகிறது. மிகுந்த சிரமப்பட்டு கொரோனாவைக் கட்டுப்படுத்திய நாடு சீனா. தற்போது மீண்டும் அங்கு கொரோனா வேகமாக பரவுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கடந்த 2 வருமாக தொடர்ந்து தொடர்ந்து லாக்டவுன்களில் முடங்கிக் கிடந்த நகரங்கள் சமீபத்தில்தான் சற்று பெருமூச்சு விட்டன. இந்த நிலையில் இப்போது மீண்டும் லாக்டவுன் கொண்டு வரப்பட்டுள்ளது. சீனா முழுவதும் 13 நகரங்களில் முழுமையான லாக்டவுன் போடப்பட்டுள்ளது. பலநகரங்களில் பகுதி நேர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாபைக் கலக்கிய பெரு வெற்றி.. ஆம் ஆத்மிக்குத் தாவும் பாஜக, காங்கிரஸ் “ஜம்ப்”லிங்கங்கள்!

வட கிழக்கு மாகாணமான ஜிலின் நகரம்தான் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு மட்டும் 3000 புதிய கேஸ்கள் வந்துள்ளன. இங்கு முழு லாக்டவுன் போடப்பட்டுள்ளது. 90 லட்சம் பேர் வசிக்கும் சாங்சுன் நகரிலும் முழு லாக்டவுன் போடப்பட்டுள்ளது. செஷன்சென், ஷாங்காய் ஆகிய நகரங்களிலும் முழுமையான லாக்டவுன் போடப்பட்டுள்ளது.

தலைநகர் பெய்ஜிங்கிலும் கேஸ்கள் அதிகரித்தால் முழு லாக்டவுன் போடப்படும் என்று தெரிகிறது. அங்கு தற்போது தீவிர கண்காணிப்பும், சோதனைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. உலகின் மிகப் பெரிய பொருளாதார வல்லரசான சீனாவில் கடந்த 6 நாட்களாகவே கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுதான் அந்த நாட்டு அரசைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்தால் சீனாவின் பொருளாதார நிலை கவலைக்குள்ளாகும் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். லாக்டவுன்கள் தொடர்ந்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். செவ்வாய்க்கிழமையன்று ஹாங்காங் பங்குச் சந்தையில் பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்தது. லாக்டவுன்கள் நீடித்தால் பங்குச் சந்தையும் கடுமையாக பாதிக்கப்படும். பெய்ஜிங், ஷாங்காய் நகரங்களில் செவ்வாய்க்கிழமையன்று விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.