மும்பை: கடந்த ஐந்து சந்தை அமர்வுகளுக்கு பிறகு சந்தையானது இன்று சற்று சரிவில் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் மெட்டல், எனர்ஜி, ஐடி துறைகள் பங்குகள் இன்று செல்லிங் பிரஷரில் காணப்படுகின்றது.
இது புராபிட் புக்கிங் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், சென்செக்ஸ், நிஃப்டியின் நிலவரம் என்ன? டாப் கெயினர் பங்குகள் என்னென்ன? டாப் லூசர் பங்குகள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.
சீன பில்லியனர்களின் சொத்து மதிப்பு பெரும் சரிவு.. அச்சத்தில் பணக்காரர்கள்.. ஏன் தெரியுமா?
முடிவு எப்படி?
இன்று காலையில் சந்தையானது சற்று ஏற்றத்தில் தொடங்கியிருந்தாலும், முடிவில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சரிவில் முடிவடைந்துள்ளது.
குறிப்பாக 30 நிறுவனங்களை கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 707.17 புள்ளிகள் குறைந்து, அல்லது 1.26% குறைந்து 55,776.85 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இது முந்தைய அமர்வில் 56,486.02 புள்ளிகளாக முடிவுற்றது. இதற்கிடையில் நிஃப்டி 208.30 அல்லது 1.23% புள்ளிகள் குறைந்து 16,663 புள்ளிகளாகவும் முடிவுற்றுள்ளது. இதற்கிடையில் 1296 பங்குகள் ஏற்றத்திலும், 2014 பங்குகள் சரிவிலும், 95 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடந்துள்ளது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் நிஃப்டி ஆட்டோ தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் சரிவில் காணப்படுகின்றது. பிஎஸ்இ மெட்டல்ஸ் குறியீடானது மிக மோசமான 4% சரிவினைக் கண்டுள்ளது. நிஃப்டி பிஎஸ்இ, பிஎஸ்இடெக், பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி ஐடி உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாக சரிவில் காணப்படுகின்றன. இதே நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாகவும், மற்றவை 1% கீழாகவும் சரிவில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா கன்சியூமர் புராடக்ஸ், எம்& எம், ஸ்ரீ சிமெண்ட்ஸ், சிப்லா, மாருதி சுசுகி டாப் கெயினர்களாகவும்., இதுவே ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி, கோல் இந்தியா, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எம் & எம், மாருதி சுசுகி, நெஸ்டில், ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும், இதுவே டாடா ஸ்டீல், கோடக் மகேந்திரா, டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
closing bell: sensex fall after 5 days rally: slumps 700 points above
sensex fall after 5 days rally: slumps 700 points above/5 நாள் ஏற்றத்திற்கு பிறகு வீச்சி.. சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. ஏன்?