ஆன்லைன் வர்த்தக நிறுவனமான Flipkart அவ்வப்போது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சலுகை விலை விற்பனை நாள்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ‘Big Savings Days Sale’ என்ற தள்ளுபடி விற்பனை தினங்களை மார்ச் 12 அன்று தொடங்கியது.
மார்ச் 16ஆம் தேதியுடன் நிறைவடையும் இந்த தள்ளுபடி விற்பனையில் வாடிக்கையாளர்கள் வசதிக்கேற்ப பல பொருள்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதில், திறன் வாய்ந்த Smartphone-களின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. எனவே, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்க காத்திருப்போருக்கு இது ஏற்ற தருணமாக அமையலாம்.
தள்ளுபடி விலை மட்டுமல்லாமல், வங்கிக் கடன் அட்டைகள் மீது கூடுதல் சலுகையும் அழிக்கப்படுகிறது. SBI Credit Card வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, கூடுதலாக 10% விழுக்காடு வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
Apple இப்படி செஞ்சிருக்கக் கூடாது – பயனர்கள் விரும்பிய iPhone SE-ஆ இது!
மேலும், பழைய போன்களுக்கு நல்ல எக்ஸ்சேஞ்ச் மதிப்பும் வழங்கப்படுகிறது. நல்ல நிலையில் இருக்கும் பழைய போன்களை கொடுத்து ரூ.15,000க்கு ஐபோனை வாங்க முடியும். இப்போது, சலுகை விலையில் உள்ள சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் எவை என்பதைப் பார்க்கலாம்.
ஐபோன் எஸ் இ (iPhone SE 128)
ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 ஆனது 4.7 ரெட்டினா எச்டி எல்சிடி டிஸ்ப்ளே, ஏ 13 பயோனிக் சிப், பின்புறத்தில் ஒற்றை 12 மெகாபிக்சல் கேமரா சென்சார், 7 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக உள்ளது. இதன் விலை பிளிப்கார்ட் தளத்தில்
ரூ.29,999
ஆக உள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 20 5ஜி (Motorola edge 20 5G)
ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான MyUX, 6.7″ முழு அளவு எச்டி+ OLED மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G SoC, 8GB LPDDR4 ரேம் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக உள்ளது.
கேமராவைப் பொருத்தவரை பின்பக்கத்தில் 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (f/1.9), 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார், 16 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் ஆகியவையும், 32 மெகாபிக்சல் செல்பி கேமராவும் உள்ளது. மேலும், 128ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, 30W டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் அடாப்டர், 4,000mAh பேட்டரி ஆகிய அம்சங்களும் அடங்கும். பிளிப்கார்ட்டில் இதன் சலுகை விலை ரூ.25,999 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது.
Motorola கிட்ட இப்படி ஒரு Phone-ஆ! ஷாக் ஆன Samsung, வெக்ஸ் ஆன Vivo!
ரியல்மி 9 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 9 Pro+ 5g)
இந்த ஸ்மார்ட்போனில் 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.4″ அங்குல முழு அளவு எச்டி+ சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ரியல்மி யுஐ 3.0 ஸ்கின்,
MediaTek Dimensity
920 5G Processor சிப்செட், மாலி ஜி86 எம்சி4 கிராபிக்ஸ் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 50 மெகாபிக்சல் சோனி சென்சார் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடன் முதன்மை சென்சாராக செயல்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை வங்கி சலுகைகள் இல்லாமல் பிளிப்கார்ட்டில் ரூ.24,999ஆக உள்ளது.
50MP சோனி OIS கேமரா… வெளியானது Realme 9 Pro Plus 5G சூப்பர் கேமரா மொபைல்!
சியோமி 11ஐ (Xiaomi 11i 5G)
மீடியாடெக் டைமன்சிட்டி 920 சிப்செட், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, . 108 மெகாபிக்சல் முதன்மை சென்சாருடன் கூடிய டிரிப்பிள் கேமரா அமைப்பு, 120 வாட் ஹைப்பர் சார்ஜிங் கொண்டு 15 நிமிடத்தில் 100% சார்ஜ் செய்யும் வசதி இதன் சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது. இதன் விலை பிளிப்கார்ட்டில் ரூ.24,999 ஆக உள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 20 பியூஷன் 5ஜி (Motorola edge 20 Fusion 5G) 6/128 – 20,499
இந்த ஸ்மார்ட்போனில் 6.67″ அங்குல முழு அளவு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே உள்ளது. மேலும் Mediatek Dimensity 800U சிப்செட், 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 32 மெகாபிக்சல் செல்பி கேமரா, 5000mAh பேட்டரி, டர்போ சார்ஜர் போன்ற சிறப்பம்சங்கள் இதில் உள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,499ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Motorola Edge 20 Fusion: பல ஆபர்களுடன் இன்று மதியம் 12 மணிக்கு விற்பனை!
சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5ஜி (Samsung galaxy f42 5g)
கேலக்ஸி f42 ஸ்மார்ட்போனில், 6.6″ அங்குல முழு அளவு எச்டி+ திரை, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், மீடியாடெக் டிமென்சிட்டி 700 புராசஸர், 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் செல்பி கேமரா, 5000mAh பேட்டரி ஆகியவை சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மெமரி வேரியண்டின் விலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.15,999 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி F42 5G அறிமுகம்: ஆரம்ப கால விற்பனையில் ரூ.3000 ஆபர்!
போக்கோ எம் 4 5ஜி (POCO M4 Pro 5G)
இந்த 5ஜி போக்கோ போனில், 6.6″ அங்குல முழு அளவு எச்டி+ திரை, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், மீடியாடெக் டிமென்சிட்டி 810 புராசஸர், 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 16 மெகாபிக்சல் செல்பி கேமரா, 5000mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் அடாப்டர் ஆகியவை சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மெமரி வேரியண்டின் விலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.14,999 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது.
Poco M4 Pro 5G: டர்போ ரேம், புதிய டைமென்சிட்டி 810 சிப்செட், 50MP ஷார்ப் கேமரா – விலை என்ன தெரியுமா?
மேற்குறிப்பிட்டுள்ள ஸ்மார்ட்போன்களின் பட்டியல் விலை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கு இதனுடன் கூடுதல் சலுகைகள் அளிக்கப்படுகிறது. எந்த வங்கி கடன் அட்டைகள் மீது தள்ளுபடிகள் அதிகம் உள்ளதோ, அதனைக் கொண்டு ஸ்மார்ட்போன்களை வாங்கினால் சிறப்பானதாக இருக்கும்.
Read more:
நம்பமுடியாத விலையில்; சிறந்த லேப்டாப்கள் – Flipkart பிக் சேவிங்க்ஸ் டேஅமேசானுடன் ஹோலி கொண்டாட்டம் – Holi Shopping Store சலுகைகள்அதிரடி காட்டும் ரஷ்யா – Instagram இஸ் நோ மோர்!
பிளிப்கார்ட் பிக் சேவிங்ஸ் டே சேல் குறித்த உங்கள் பார்வையை கீழே உள்ள கருத்துப் பெட்டியில் பதிவிடவும்