தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாகவே பிரச்சனையாக இருந்து பிரிந்துவிட்டார்கள். ஐஸ்வர்யாவுடன் பிரச்சனை ஏற்படும்போது எல்லாம் புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வந்தார்
தனுஷ்
.
அப்படியாவது ஐஸ்வர்யாவை விட்டு தள்ளி இருக்கலாம் என்று. இந்நிலையில் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான ஜகமே தந்திரம்,
மாறன்
ஆகிய படங்கள் ரசிகர்களை கவரவில்லை.
தனுஷ் கதை தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப பிரச்சனையில் இருந்து எஸ்கேப் ஆக தன்னை தேடி வரும் கதையில் எல்லாம் நடித்தால் இப்படித் தான் தொடர் தோல்வி ஏற்படும்.
தற்போது தான் ஐஸ்வர்யா பக்கத்தில் இல்லையே. அதனால் தனுஷ் ஒரு பிரேக் எடுத்துவிட்டு, மீண்டும் நடித்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.
ஐஸ்வர்யாவை பிரிந்ததில் இருந்தே அதில் இருந்து கவனத்தை திசை திருப்ப தொடர்ந்து ஷூட்டிங்ஸ்பாட்டில் இருக்கிறார் தனுஷ். தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி ஆகிய படங்கள் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனுஷை பிரேக் எடுக்கச் சொல்கிறார்கள் சினிமா ரசிகர்கள். தனுஷ் தற்போதைக்கு பிரேக் எடுப்பது கடினம் தான்.
Dhanush:நல்ல முடிவு எடுத்த ஐஸ்வர்யா: தனுஷ் ரசிகர்கள் ஹேப்பி