நடிகர் ஷாருக்கானின் படம் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக திரைக்கு வரவில்லை. தற்போது பதான் படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட ஷாருக்கான் திட்டமிட்டு அதற்கான வேலையில் முழுவேகத்தில் ஈடுபட்டுள்ளார். பெரும்பாலும் பாலிவுட்டில் அனைவரும் ஒடிடி தளத்தில் நுழைந்துவிட்டனர். நடிகை கங்கனா ரணாவத் கூட சமீபத்தில் லாக்அப் என்ற புதிய ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறார். தற்போது நடிகர் ஷாருக்கானும் ஒடிடி தளத்திற்கு வருவதாக அறிவித்துள்ளார். எஸ்ஆர்கே+ என்று பெயரில் ஷாருக்கான் ஒடிடிக்கு வருகிறார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் விரைவில் வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார். ஒடிடி ரியாலிட்டி ஷோ தயாரிப்பாளராக ஷாருக்கான் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Dream come true! Collaborating with @iamsrk on his new OTT app, SRK+ https://t.co/1OR7dZczkB
— Anurag Kashyap (@anuragkashyap72) March 15, 2022
அவரே ரியாலிட்டி ஷோவை நடத்துவாரா அல்லது எதாவது நிகழ்ச்சியை தயாரிக்க மட்டும் செய்வாரா என்று அறிவிக்கவில்லை. ‘குச் குச் ஹோனே வாலா ஹை, ஒடிடி கி துனியா மெயின்’ என்று மட்டும் அறிவித்துள்ளார். ஒடிடி உலகில் ஏதோ நடக்கப்போகிறது என்று இந்தியில் ஷாருக் கான் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஷாருக் கான் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் ஷாருக்கானின் ஒடிடி வருகைக்கு மிகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இயக்குனர் அனுராக் காஷ்யப் நடிகர் ஷாருக் கானுடன் ஒடிடி ஆப்பில் இணைந்து செயல்படப்போவதாக தெரிவித்துள்ளார். ஷாருக் கான் டிஸ்னி+ஹாட்ஸ்டாருடன் இணைந்து செயல்பட இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகி வெளியில் வந்த பிறகும் சில மாதங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிட்டார். தற்போது மீண்டும் படப்பிடிப்புகளில் மிகவும் பிஸியாகிவிட்டார். சமீபத்தில் நடந்த ஐபிஎல் விளையாட்டு வீரர்கள் ஏலத்தில் கூட ஷாருக்கான் பங்கேற்காமல் படப்பிடிப்பில் பங்கேற்றார். ஐபிஎல் ஏலத்தில் ஆர்யன் கான் தனது சகோதரியுடன் கலந்து கொண்டார்.