இந்தியாவில் வங்கி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வங்கிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் ஆய்வுகளுக்குப் பின்பு கடன் அளிக்கத் துவங்கியுள்ளது. ஆனாலும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட பல வங்கிக் கடன்களில் மோசடி செய்யப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் வங்கி மோசடிகளுக்குப் பின்பு இந்தியாவில் ஒவ்வொரு வங்கியின் வாராக் கடன், வங்கி மோசடிகள் அளவுகள் அதிகளவில் கவனிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே அதிக வங்கி மோசடிகள் நடந்துள்ள இடம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.1.5 லட்சம் வரை வரி சலுகை.. வங்கி வட்டியை விட அதிக வருமானம்.. 5 ஆண்டுகள் மட்டுமே முதலீடு..!
முதல் இடம்
2021-22 ஆம் நிதியாண்டின் முதல் 9 மாத தரவுகள் அடிப்படையில் இந்தியாவிலேயே அதிகத் தொகை கொண்ட வங்கி மோசடிகள் பதிவாகியுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மகாராஷ்டிராவைத் தொடர்ந்து டெல்லி, தெலுங்கானா ஆகியவை முதல் மூன்று இடத்தைப் பிடித்துள்ளது.
டெல்லி, தெலுங்கானா
இதன் படி 2021-22 ஆம் நிதியாண்டின் முதல் 9 மாதத்தில் மகாராஷ்டிரா 124 கோடி ரூபாயும், டெல்லியில் 93.07 கோடி ரூபாயும், தெலுங்கானாவில் 89 கோடி ரூபாய் அளவிலான வங்கி மோசடிகள் பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா
4வது இடத்தில் 59.7 கோடி ரூபாய் உடன் கேரளாவும், 5வது இடத்தில் 47.08 கோடி ரூபாய் உடன் தமிழ்நாடும், 6வது இடத்தில் 40.47 கோடி ரூபாய் உடன் பஞ்சாப் மாநிலமும் உள்ளது. கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டில் 241.59 கோடி ரூபாய் அளவிலான வங்கி மோசடிகள் பதிவாகியுள்ளது.
வங்கி மோசடிகள்
இதுவே 2020-21 ஆம் நிதியாண்டில் மொத்தம் 6807 கோடி ரூபாய் அளவிலான வங்கி மோசடிகள் பதிவாகியுள்ளது. இக்காலகட்டத்தில் டெல்லி அதிகப்படியாக 1530 கோடி ரூபாய் வங்கி மோசடி பதிவாகி முதல் இடத்தைப் பிடித்திருந்த நிலையில், இந்த ஆண்டு முதல் 9 மாதத்தில் மகாராஷ்டிரா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
648 கோடி ரூபாய்
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சகம் அளித்த தகவல்கள் படி 2012-22ஆம் நிதியாண்டின் ஏப்ரல் – டிசம்பர் மாதத்தில் இந்தியா முழுவதும் 648 கோடி ரூபாய் அளவிலான வங்கி மோசடிகள் பதிவாகியுள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது கோட்டாக் மஹிந்திரா வங்கி தான்.
Maharashtra sees most bank frauds in India in FY22, Check Tamilnadu situation
Maharashtra sees most bank frauds in India in FY22, Check Tamilnadu situation இந்தியாவிலேயே அதிக வங்கி மோசடிகள் இங்கு தான் நடந்துள்ளது..!