உக்ரைன் – ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியில் முந்தைய வாரங்களில் கச்சா எண்ணெய் விலையானது வரலாற்று உச்சத்தினை எட்டியது. எனினும் தற்போது விலை சற்றே குறைந்துள்ளது.
எனினும் இன்று வரையில் இப்பிரச்சனை ஓய்ந்ததாக தெரியவில்லை. மாறாக நாளுக்கு நாள் பிரச்சனையானது பூதாகரமாக கிளம்பி வருகின்றது.
ரூ.1.5 லட்சம் வரை வரி சலுகை.. வங்கி வட்டியை விட அதிக வருமானம்.. 5 ஆண்டுகள் மட்டுமே முதலீடு..!
இந்த நிலையில் பலவேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு பல்வேறு தடைகளை தொடர்ந்து விதித்து வருகின்றன. குறிப்பாக ரஷ்ய எண்ணெய்-க்கு தடை விதித்துள்ளன. இதன் காரணமாக ரஷ்யாவின் முக்கிய வணிகமாக இருந்து வரும் எண்ணெய் வணிகமானது மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விலை
இதற்கிடையில் தங்களது வணிகத்தினை விரிவாக்கம் செய்யவும், தடைகளால் பாதிக்கப்படாமல் இருக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் சப்ளை செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்தியாவுக்கு நல்ல சான்ஸ்
இந்தியா பெரும்பாலும் பயன்படுத்தும் எண்ணெய்-ல் அதிகளவு இறக்குமதி செய்தே பயன்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் விலை அதிகரித்து வரும் சூழலில், அது இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரஷ்யா தள்ளுபடி விலையில் எண்ணெய் இறக்குமதி செய்வதாக கூறுவது நிச்சயம் இந்தியாவுக்கு மிக நல்ல சான்ஸ் ஆகவும் பார்க்கப்படுகிறது.
பேமெண்ட் ஆப்சன் எப்படி?
எனினும் ரஷ்யா மீது பல நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் அது இந்தியாவுக்கு பிரச்சனையாக மாறலாம் என்ற நிலையும் இருந்து வருகின்றது. மேலும் ரஷ்யாவின் பல வங்கிகளும் ஸ்விப்ட் சேவை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ரஷ்யா தற்போது இறக்குமதிகளுக்கான தொகையை யிபிஐ (UPI), ஃபாஸ்டர் பேமெண்ட் சேவை (FPS) உள்ளிட்ட ஆப்சன்கள் மூலம் பணம் பரிவர்த்தனை பற்றி ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரூபே கார்டு & எம் ஐ ஆர் கார்டு
மேலும் வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனையை எளிதாக்குதற்காக ரஷ்ய வங்கியின் நிதி அமைப்புடன் இணைந்து, இந்திய வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் கட்டணமாக ரூபே கார்டுகள் மற்றும் எம் ஐ ஆர் கார்டுகளை ஏற்றுக் கொள்வது குறித்து, இரு தரப்பும் விவாதித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வணிகத்தினை நிறுத்த முடியாது?
ஸ்விப்டில் இருந்து ரஷ்ய வங்கிகளுக்கு தடை விதித்தால், இதன் மூலம் எங்களது இருதரப்பு வர்த்தகத்தினையும் நிறுத்த முடியாது. ரஷ்ய அரசும், இந்திய அரசும் இது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன. மேலும் ரூபே கார்டு மற்றும் MIR கார்டினையும் ஏற்றுக் கொள்வது குறித்தும் விரைவில் சுமூக தீர்வு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவுக்கு தடை
விசா கார்டு, மாஸ்டர் கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட உலகாளாவிய நெட்வொர்குகள், ரஷ்யாவினை தடை செய்துள்ள நிலையில் , இந்தியாவின் NPCI- ல் நடத்தப்படும் ரூபே கார்டு மற்றும் உள்ளூர் பரிவர்த்தனைக்காக ரஷ்யாவில் பயன்படுத்தப்படும் ரஷ்யாவில் MIR கார்டும் பயன்படுத்தப்படுகிறது. இவ்விரண்டையும் ஒருங்கிணைத்து பரிமாற்றம், செய்யத் தான் ரஷ்ய அரசும், இந்தியாவும் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
Russia, India look different payment channels amid sanctions
Russia, India look different payment channels amid sanctions/இந்தியாவுக்கு கிடைத்த கிரேட் சான்ஸ்.. ஆனால் இப்படியும் ஒரு பிரச்சனை இருக்கு..!