இந்தியாவை ஊதி தள்ளிய இங்கிலாந்து! பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டான பரிதாபம்


மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

மகளிர் உலகக் கோப்பை 2022 தொடரில் இன்று பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீராங்கனை தொடக்கம் முதலே திணறினார்கள்.

அணியின் ஓப்பனர் யஷ்திகா பட்டியா 8 ரன்கள் குவித்த நிலையில் அன்யாவின் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். கேப்டன் மிதாலி ராஜ் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

இந்திய அணியின் தீப்தி ஷர்மா, ஸ்னே ரானா ஆகிய இருவரும் டக் அவுட்டாகி வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
இப்படி அடுத்தடுத்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் இந்திய அணி 36.2 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து தரப்பில் சார்லி தீன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணி நிதானமாக ரன்களை சேர்க்கத் துவங்கியது.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்திய போதும், இலக்கை நோக்கிய இங்கிலாந்தின் பயணத்தை இந்திய பவுலர்களால் தடுக்க இயலவில்லை. 31.2 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.


இங்கிலாந்து தரப்பில் ஹீதர் நைட் 53 ரன்களும், நடாலி ஸ்கீவர் 45 ரன்களும் குவித்து வெற்றிக்கு வித்திட்டனர். இதன்மூலம் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இங்கிலாந்து அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.

இந்த போட்டியில் தனது மாயாஜால சுழற்பந்து வீச்சினால் எதிரணியை திணறடித்த சார்லி தீன் Player of the match விருதை வென்றார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.