டெல்லி: இந்திய ஜனநாயகத்தில் சமூக ஊடகங்கள் தலையிடுவதை தடுத்து நிறுத்த மக்களவையில் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சமூக ஊடகங்கள் செல்வாக்கு செலுத்துவதை தடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். இளைஞர்கள் சிந்தனையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் தவறான தகவல்கள் ஊடகங்கள் மூலம் பரப்பப்படுவதாக சோனியா காந்தி புகார் கூறியுள்ளார். போலி விளம்பரங்களை செய்தி நிறுவனங்கள் தரும் செய்திகள் போல முகநூல், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படுத்தாக சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.2019 தேர்தலின் போது பாஜகவுக்காக ரிலையன்ஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் விதிகளை மீறி விளம்பரம் செய்ததை அவர் எடுத்து கூறினார். முகநூல், டிவிட்டர் போன்ற ஊடகங்கள் ஆட்சியாளர்களின் ரகசிய கூட்டுடன் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயல்வது இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து என அவர் தெரிவித்துள்ளார்.