கடந்த திங்கட்கிழமை (14) கொவிட் 19 தடுப்பூசி 25 ஆயிரத்து 14 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையில் இதுவரையில் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 78.86 வீதத்தை எட்டியுள்ளதுடன், இரண்டாவது டோஸ் பெற்றவர்களின் எண்ணிக்கை 66.33 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தொற்றுநோயியல் பிரிவின் அறிக்கையின்படி, 20 வயதிற்கு மேற்ட்டவர்களில் 96 வீதமானோர் முதல் இரண்டு டோஸினையும், 51.94 சதவீதமானோர் மூன்றாவது டோஸினையும் பெற்றுள்ளனர்.
12 வயதிற்கு மேற்பட்டவர்களில் 96.1 வீதமானோர் முதல் டோஸினையும் 82.1 வீதமானோர் 2 ஆவது டோஸினையும் பெற்றுள்ளனர். 16 தொடக்கம் 19 வயதுக்ககிடைப்பட்டவர்களில் 79.8 வீதமானோர் தடுப்பூசியினை பெற்றுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு கூறுகிறது.
இலங்கையில் இதுவரையில் கொவிட் 19 தடுப்பூசியினை பெற்றுக்கொணடவர்களில் 1 கோடியே 69 இலட்சத்து 72 ஆயிரத்து 532 பேர் முதல் டோஸையும், 1 கோடியே 43 இலட்சத்து 36 ஆயிரத்து 813 பேர் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர். மூன்றாவது டோஸ் 76 இலட்சத்து 13 ஆயிரத்து 654 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் திங்கட்கிழமை 13 ஆயிரத்து 475 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை பைஷர் முதல் டோஸ் 2 ஆயிரத்து 503 பேருக்கும், இரண்டாவது டோஸ் 7 ஆயிரத்து 831 பேருக்கும் வழங்கப்பட்டது. இதில் 24 இலட்சத்து 83 ஆயிரத்து 110 பேர் முதல் டோஸை பெற்றுள்ளதுடன், 8 இலட்சத்து 12 ஆயிரம் பேர் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர்.
இதேவேளை சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸை 302 பேர் பெற்றதுடன், இதுவரையில் மொத்தமாக 1 கோடியே 20 இலட்சத்து 45 ஆயிரத்து 880 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது.. இதில் 903 பேர் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றதுடன், இதுவரையில் மொத்தமாக 1 கோடியே 11 இலட்சத்து 63 ஆயிரத்து 47 பேர் பெற்றுள்ளனர்.
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் முதல் டோஸை 1 கோடியே 47 இலட்சத்து 96 ஆயிரத்து 31 பேர் பெற்றுள்ளதுடன், 1 கோடியே 41 இலட்சத்து 85 ஆயிரத்து 93 பேர் அஸ்ட்ராஜெனெகா இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர் என்று தொற்றுநோயியல் பிரிவு கூறுகிறது.
மொடோனா முதல் டோஸ் 80 இலட்சத்து 48 ஆயிரத்து 1 பேர் பெற்றுள்ளதுடன், 7 இலட்சத்து 87 ஆயிரத்து 361 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
ஸ்புட்னிக் வி இன் முதல் டோஸை 1 இலட்சத்தின் 59 ஆயிரத்து 110 பேரும், 1 இலட்சத்து 55 ஆயிரத்து 812 பேர் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர்.
K. Sayanthiny