தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2022 பெப்ரவரியிலும் விரிவடைந்தன.
தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2022 பெப்புருவரியில் 52.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து தொடர்ந்தும் விரிவடைந்தது. புதிய கட்டளைகளில் தொடர்ச்சியான விரிவடைதல் இம்மேம்பாட்டிற்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனினும், உற்பத்தி, கொள்வனவுகளின் இருப்பு, தொழில்நிலை என்பன வீழ்ச்சியடைந்த அதேவேளை வழங்குநர் விநியோக நேரம் மாதத்திற்கு மாதம் அடிப்படையில் நீட்சியடைந்தது.
பணிகள் கொ.மு.சுட்டெண்ணானது, 2022 பெப்புருவரியில் 51.8 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து பணிகள் துறை முழுவதும் சிறிதளவான வளர்ச்சியொன்றினை எடுத்துக்காட்டியது. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள், நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் ஆகிய துணைச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் இச்சிறியளவான அதிகரிப்புக்கு துணையளித்திருந்தன.
முழுவடிவம்