புதுச்சேரி-அரசு பள்ளிகள் முழு நேரமாக செயல்பட்டு வருவதால், இலவச அரிசி வழங்கும் பணியை ரேஷன் கடைகளுக்கு மாற்ற வேண்டும்.புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லுாரிகள், கடந்த பிப்., 4ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டு, முழு நேர நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக இலவச அரிசி மூட்டைகளை அரசு பள்ளிகளில் இருப்பு வைக்கப்பட்டு வருகிறது. இது, மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இடையூறாக அமைகிறது.பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வரும் நிலையில், அவர்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் அரிசி மூட்டைகள் ஆங்காங்கே இறக்கி வைக்கப்படுகிறது. அத்துடன் அரிசி ஆங்காங்கே சிதறி கிடக்கிறது.வகுப்பறைகள் இலவச அரிசி குடோனாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் வகுப்பறை பற்றாக்குறை ஏற்படுகிறது.எனவே, இலவச அரிசி வழங்கும் பணியை ரேஷன் கடைகளுக்கு மீண்டும் மாற்ற வேண்டும் என அரசு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
புதுச்சேரி-அரசு பள்ளிகள் முழு நேரமாக செயல்பட்டு வருவதால், இலவச அரிசி வழங்கும் பணியை ரேஷன் கடைகளுக்கு மாற்ற வேண்டும்.புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, பள்ளி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.