ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதலால், நாட்டில் இருந்து வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவது போர் தொடர்பான கவலைகளைத் தவிர வேறுவிதமான கவலைகளை அதிகரித்துள்ளது.
நாட்டில் இருந்து வெளியேறும் பெண்களையும், சிறுமிகளையும் மனித கடத்தல்காரர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என்பதற்கான அறிகுறிகளை போலந்து கண்டுள்ளதாக அதிகாரிகள் மற்றும் உதவி ஊழியர்கள் தெரிவித்தனர்.
கடத்தல் வழக்குகள் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், தற்போது தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடத்தல் அபாயங்கள்
கடந்த மாதம் போலந்தின் கிழக்கு அண்டை நாட்டின் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்தியதில் இருந்து, நகரங்கள் மீது ஷெல் வீசி பொதுமக்களைக் கொன்றதை அடுத்து கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள், (பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள்) போலந்திற்கு வந்துள்ளனர்.
மேலும் படிக்க | ரஷ்யா – உக்ரைன் போர்: கிவ் நகரில் மார்ச் 17ம் தேதி வரை ஊரங்கு உத்தரவு அமல்
செவ்வாயன்று (2022, மார்ச் 15) எல்லைப் பகுதிக்கு சென்ற போலந்தின் மனித உரிமைகள் ஆம்புட்ஸ்மேன் Marcin Wiacek, போலந்து எல்லைக் காவலரின் உள்ளூர் தலைவர் Andrzej Popko உடன் கடத்தல் அபாயங்கள் குறித்து விவாதித்தார்.
“அதிகாரிகள் இந்த அபாயங்கள் குறித்து மிகவும் விழிப்புடன் உள்ளனர், இதுபோன்ற சூழ்நிலைகளில் கடத்தல் நடைபெறலாம் என சந்தேகம் ஏற்படும் தரவுகளைநாங்கள் ஏற்கனவே பெற்றுள்ளோம்” என்று வைசெக் செய்தியாளர்களிடம் கூறினார்.
(புகைப்படம்: AFP)
பெண்கள் மற்றும் சிறார்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்
ஐநா ஆய்வின்படி, கிழக்கு ஐரோப்பாவில் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீது கடத்தல்காரர்கள் கவனம் செலுத்துகின்றனர், குறிப்பாக பாலியல் சுரண்டலுக்காக பெண்கள் மற்றும் சிறுமிகள் அதிகம் கடத்தப்படுகின்றனர்.
போரிலிருந்து வெளியேறும் அகதிகளில் பெரும்பாலானோர் அதிலும் முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகள், வேலை மற்றும் தங்குமிடம் உறுதியளிக்கும் குற்றக் குழுக்களுக்கு இரையாகின்றனர் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேற்கு உக்ரேனிய நகரமான எல்விவ்க்கு அருகில் உள்ள ப்ரெஸ்மிஸ்லில் உள்ள உதவிப் பணியாளர்கள், அகதிகளுக்கு வீடுகள் வழங்கப்படுவது குறித்து கவலைப்படுவதாகக் கூறினர்.
(புகைப்படம்: AFP)
சரியான நேரத்தில் தலையீடு
போலந்தில் உள்ள Ukranians ஒன்றியத்தின் Przemysl அலுவலகத்தின் தலைவரான Ihor Horkiv, ஒரு அரச சார்பற்ற குழுவானது, உக்ரேனியப் பெண் துருக்கிக்குச் செல்வதற்குக் கொடுக்கப்பட்ட விமானச் சீட்டைப் பயன்படுத்துவதைத் தடுக்க காவல்துறை தலையிட்ட ஒரு சம்பவத்தை விவரித்தார்.
போர் தொடங்கிய ஆரம்ப நாட்களில், லட்சக்கணக்கிலான மக்கள் போலந்துக்குள் சென்றனர். இது, கடத்தல்காரர்களுக்கு வசதியாகிவிட்டது.
மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் போர்: அமைதி உடன்படிக்கையை எதிர்நோக்கும் உக்ரைன்!
பாதுகாப்பான பயணங்களுக்கான ஆப்
ஓட்டுநர்கள் மற்றும் அவர்களுடன் பயணம் செய்யும் அகதிகளைப் பதிவு செய்யும் தொலைபேசி செயலி சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
Przemysl இல் உள்ள மேயர் அலுவலகத்தைச் சேர்ந்த Witold Wolczyk, இதுவரை சுமார் 20,000 பேர் இந்த செயலியைப் பயன்படுத்தியுள்ளனர், இது மக்கள் யாருடன் பயணிக்கிறார்கள், எப்போது அவர்கள் சென்றடைகிறார்கள் என்பதைக் கண்காணிக்க அதிகாரிகளை அனுமதிக்கிறது.
“இது அகதிகளுக்கு ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பு உணர்வையும் அளிக்கிறது” என்று அவர் கூறினார். மனித கடத்தலுக்கு எதிராக போராடும் வார்சாவை தளமாகக் கொண்ட அரசு சாரா நிறுவனமான லா ஸ்ட்ராடாவின் தலைவர் இரேனா டேவிட்-ஓல்சிக், மக்கள் கடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் எதுவும் இல்லை என்றார்.
ஆனால், ஆட்சேர்ப்பு முயற்சிகள் ஆன்லைனில் பரவலாக இருப்பதாகவும், துருக்கி அல்லது மெக்சிகோவிற்குச் செல்வதற்கான சலுகைகள் அல்லது குழந்தைகளின் வயதின் அடிப்படையில் சலுகைகள் கொடுக்கப்படுவதையும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?