டாடா வசமான ஏர் இந்தியா நிறுவனத்தில் முதல் முறையாக தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டது.
ஏர் இந்தியா விமானங்களில் எரிபொருள் நிரப்புதல், பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகளை அரசுக்கு சொந்தமான AIESL நிறுவனத்தின் ஒப்பந்தப் பணியாளர்கள் 1,700 பேர் கவனித்து வந்தனர். சம்பள உயர்வு, வேலை ஒப்பந்தத்தை புதுப்பித்தல் மற்றும் அகவிலைப்படி உயர்வு என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் டெல்லியில் இருந்து மும்பை, பூனே மற்றும் சூரத்துக்கு விமானங்கள் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சில ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.