ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் .. கேப்ஜெமினியின் சூப்பர் அறிவிப்பு..!

ஐடி துறையானது சமீப ஆண்டுகளாகவே நல்ல வளர்ச்சியினை கண்டு வருகின்றது. இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த போக்கு தொடரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி துறையின் தேவையானது கணிசமாக உச்சத்தினை எட்டியுள்ளது.

தற்போது இந்த போக்கினை இன்னும் மேம்படுத்தும் உக்ரைன் – ரஷ்யா இடையான பதற்றமும் அதிகரித்து வருகின்றது. இப்பிரச்சனைக்கு மத்தியில் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு இன்னும் வாய்ப்புகள் கூடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் சான்ஸ்.. தங்கம் விலை தொடர் சரிவு.. இது வாங்க சரியான நேரமா?

பணியமர்த்தல்

பணியமர்த்தல்

இதற்கிடையில் ஐடி நிறுவனங்களில் தேவை அதிகம் உள்ள அதே நேரம், அட்ரிஷன் விகிதம் உச்சம் தொட்டுள்ளது. இதன் காரணமாக பணியமர்த்தல் விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் தற்போது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கேப்ஜெமினி நிறுவனம், இந்தியாவில் நடப்பு ஆண்டில் 60,000 பேரை பணியமர்த்தலாம் என தெரிவித்துள்ளது.

தேவை அதிகம்

தேவை அதிகம்

இந்த பணியமர்த்தல் விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும் அதிகமாகும். இது தொடர்ந்து அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில் பணியமர்த்தல் அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டிலும் இந்த பணியமர்த்தல் விகிதமும் அதிகக்கலாம் என இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஷ்வின் யார்டி கூறியுள்ளார்.

இந்தியர்கள் தான் அதிகம்
 

இந்தியர்கள் தான் அதிகம்

நாங்கள் உலகளவில் 3,25,000 பணியாளர்களைக் கொண்டுள்ளோம். அவர்களில் பாதிபேர் இந்தியாவில் உள்ளனர். தொடர்ந்து நிறுவனம் நல்ல வளர்ச்சியினை கண்டு வருகின்றது. ஆக புதிய பணியமர்த்தல் என்பது தொடர்ந்து அதிகரிக்கும், இது பிரெஷ்ஷர்கள் மற்றும் லேட்டரல் பணியமர்த்தல் என பல வகையிலும் பணியமர்த்தலானது இருக்கும்.

கவனம்

கவனம்

தற்போது வளர்ந்து வரும் துறைகளாக இருக்கும் 5ஜி மற்றும் குவாண்டம் போன்ற வளர்ந்து வரும் பகுதிகளில், அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

கேப்ஜெமினி நிறுவனம் கடந்த ஆண்டில் எரிக்சன் நிறுவனத்துடன் இணைந்து கடந்த ஆண்டு, 5ஜி லேப்பினை அமைத்தது. இது தொடர்ந்து இந்தியாவில் விரிவாக்கம் செய்து வருகின்றது.

பணியமர்த்தல் அதிகரிக்கலாம்

பணியமர்த்தல் அதிகரிக்கலாம்

இதற்கிடையில் நிறுவனம் தொடர்ந்து வலுவான வளர்ச்சியினை பதிவு செய்தும் வருகின்றது. தேவை தொடர்ந்து இன்னும் அதிகரித்து வரும் நிலையில், வரும் காலாண்டுகளிலும் வலுவான வளர்ச்சியினை பதிவு செய்யலாம். இதனால் பணியமர்த்தலும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் நிறுவனம் திறன்களை மேம்படுத்த, கல்வி நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

வளர்ச்சி பாதை

வளர்ச்சி பாதை

கடந்த மாதம் கேப்ஜெமினியின் தலைமை செயல் அதிகாரி அய்மன் எசாட், நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் செல்லும்போது, இந்தியா அதில் முக்கிய பங்கு வகிக்கும். இந்தியாவில் வளரும் தலைவர்களை பார்க்க வேண்டும். இவர்கள் உலகளவில் வழி நடத்த முடியும் என்றும் கூறியிருந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Capgemini plans hire over 60,000 employees in current year

Capgemini plans hire over 60,000 employees in current year/ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் .. கேப்ஜெமினயின் சூப்பர் அறிவிப்பு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.