காதல் தோல்வியால் பெண் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்டாரா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்தவர் பார்கவி. இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டன.ர் முதற்கட்ட விசாரணையில் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.
அதில், ஐ லவ் யூ அம்மா அப்பா எனவும் உங்களைப்போன்ற அம்மா அப்பா யாருக்கும் கிடைக்க மாட்டார்கள் எனவும் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும் எழுதப்படுள்ளது.
அவர், வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததும் காதல் தோல்வியில் முடிந்ததும் தெரியவந்தது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.