சர்தார் படத்தின் ஓடிடி உரிமையை பெற்ற ஆஹா தமிழ்
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி தற்போது 'சர்தார்' படத்தில் நடித்து வருகிறார். ராஷி கண்ணா மற்றும் ரெஜிஷா விஜயன் ஆகியோர் கார்த்தியுடன் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்நிலையில் சர்தார் படத்தின் டிஜிட்டல் உரிமைகளை ஆஹா தமிழ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஆஹா தமிழ் ஓடிடி தளம் 20 கோடிக்கு மேல் இப்படத்தை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.